பங்களாதேஷில் 16 பேருக்கு மரண தண்டனை!

Friday, October 25th, 2019

19 வயதான பாடசாலை மாணவி ஒருவரின் கொலை தொடர்பாக, பங்களாதேஷில் 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் உள்ள சிறிய நகரான ஃபெனியில், கடந்த ஏப்ரல் மாதம் நுஷ்ரத் ஜஹான் ராஃபி என்ற 19 வயதான மாணவி படுகொலை செய்யப்பட்டார்.

அவர் கற்றுவந்த பாடசாலையின் தலைமை ஆசிரியரது பாலியல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடு தெரிவித்ததை அடுத்தே அவர் கொல்லப்பட்டார்.

குறித்த மாணவியின் கொலை பங்களதேசில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததுடன், சம்பவத்துக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.

இதுதொடர்பான வழக்கு விசாரணை துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கொலை செய்யப்பட்ட மாணவியின் இரண்டு வகுப்புத் தோழிகளும் அடங்குகின்றனர்

Related posts: