பகிடிவதையில் ஈடுபடுபட்டால் 10 வருட சிறை – உயர் கல்வி அமைச்சு!

Sunday, September 1st, 2019


பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 2018 ௲ 2019 கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல், உள ரீதியாக சித்திரவதைக்கு உட்படுத்துவோரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவௌ குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பகிடிவதையுடன் தொடர்புபடும் மாணவர்கள் மட்டுமல்லாது , அதற்கு ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாராக இருப்பினும் அவர்களையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

மேலும் கொடூரமான பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருடச் சிறைத்த் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குரிய ஒத்துழைப்புகளை பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ்மா அதிபர் வழங்குவதாகத் தெரிவித்துள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: