நீரில் மூழ்கிய யாழ்ப்பாணம் விமான நிலையம்!

Monday, October 21st, 2019


இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் சேற்று நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.

எனினும் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக விமான நிலையத்தில் சேற்று நீர் தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விமான நிலையத்தில் சேற்று நீர் தேங்கி நிற்பது குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இந்த விமான நிலையம் அவசர அவசரமாக  திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவசரமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: