நீக்கப்படுகிறது தடை உத்தரவு – பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு!

Saturday, September 21st, 2019


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அமுலான அவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அவசரகால சட்டம் நீக்கப்பட்ட நிலையில், அதன் கீழ் தடை செய்யப்பட்ட நிக்காப் , புர்க்கா மற்றும் முகத்தை மூடிய தலைக்கவசம் அணி விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கி பிரச்சனைகள் குறித்து பொலிஸாருக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் இன்று விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி அவசரகால தடை சட்டம் நீக்கப்பட்டது. இதன்போது முகத்தை மறைத்து ஆடை அணிய விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் முஸ்லிம் பெண்கள் வழமை போன்று முகத்தை மூடும் வகையில் ஆடை அணி முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: