நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 20 இலட்சம் ஒதுக்கிடு: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Saturday, December 14th, 2019


நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 20இலட்சம் ரூபா வீதமும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20மில்லியன் ரூபா வீதமும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் அபிவிருத்தி பணிகளை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி பணிப்புரை பிறப்பித்தார் என செய்திகள் கூறுகின்றன.

மேலும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 700 வேலைவாய்ப்புக்களை வழங்கவும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 100வேலைவாய்ப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அரசாங்கத்தின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர், தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்படி விடயங்களை கூறியுள்ளார்  என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: