நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் 2 பிரதான கட்சிகள் உள்ளிட்ட 17 கட்சிகள் கோட்டாபயவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Friday, November 1st, 2019நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய 2 பிரதான கட்சிகள் உள்ளிட்ட 17 கட்சிகள் ஜனாதிபதி வெட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுட்ன புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றல் கைச்சாதிட்டுள்ளனர்.
நேற்றையதினம் நடைபெற்ற கறித்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையிலன ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் தலைமையில் 17 கட்சிகள் ஒன்றிணைந்த புதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என்ற பெயரில் இந்தப் பதிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான புரிந்தணர்வு உடன்படிக்கை நேற்று வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நேற்று மற்பகல் 10 மணியளவில் கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் ஶ்ரீலங்கா பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் இதற்கான நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இதன் போது கூட்டணியில் அங்கம் வகிக்கும் 17 கட்சிகளின் செயலாளர்கள் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன சுதந்திரக் கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தினேஷ் குணவர்த்தனா தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, டீயூ குணசெகர தலைமையிலான ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, திஸ்ஸ விதாரண தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான பிவிதுறு ஹெலஉறுமய, ஆறுமுகன் தெர்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஏ.எல்.எம். அதாவுல்லா தலையைிலான தேசிய காங்கிரஸ், அசங்க நவரட்ன தலைமையிலான ஶ்ரீலங்கா மஹஜன கட்சி, கலன்சூரிய தலைமையிலான தேச விமுக்தி ஜனதாக் கட்சி, பீ.பிரசாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ரிலான் அலஸ் தலைமையிலான ஐக்கிய மக்கள் கட்சி உள்ளடங்கலாக 17 கட்சிகளின் செயலாளர்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்தக் கூட்டணியில் இணைத் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் செயற்படவுள்ளதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் இந்தக் கூட்டணியூடாக கதிரைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளனர்.
இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனி ஒரு கட்சியாக அதன் வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|