நள்ளிரவுமுதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Wednesday, August 14th, 2019


நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், ஒட்டோ டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 138 ரூபாவிற்கும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 163 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

மேலும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 134 எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஒ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை இன்று முதல் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐ.ஒ.சி 95 ஒக்டைன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 166 ரூபாவிற்கும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 134 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

மேலும் ஒக்டைன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என லங்கா ஐ.ஒ.சி அறிவித்துள்ளது.

Related posts: