நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் இது – ஜனாதிபதி!

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடியை பார்க்கும் போது, நாடு மிகவும் குறுகிய காலத்தில் எதிர்பார்க்காத அதளபாதாளத்திற்குள் விழும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்சவின் இரண்டு நூல்கள் மற்றும் சீ.டி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அனைத்து நெருக்கடிகளின் கதைகளும் பெரிய கதைகள். இந்த நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்பது பொதுவாக நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் பொறுப்பு.
இந்த நெருக்கடியை தீர்க்கவில்லை என்றால், அரசியல், சமூக நெருக்கடிகள் என அனைத்துடனும் மிக குறுகிய காலத்தில் நாம் எதிர்பார்க்காத அதளபாதாளத்திற்குள் விழுவோம்.
அனைவரும் நாடு குறித்து துரிதமாக தீர்மானங்களை எடுத்து, நாட்டையும் மக்களையும் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|