தோழர் லிங்கேஸ் அவர்களின் புகளுடலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் கட்சி கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, December 3rd, 2019

 தோழர் லிங்கேஸ் அவர்களின் புதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கட்சிக்கொடி போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் புதுக்குடியிரப்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளருமான அமரர் தோழர் லிங்கேஸ்  அவர்கள் சிறிது காலமாக உடல் நலக் குறைவுக்கு ஆளாகியிருந்த நிலையில்  கடந்த 30.11.2019 அன்று காலமானார்.

இந்நிலையில் மன்னாரில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் தோழர் லிங்கேஸ் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

அத்துடன் கட்சியின் ஏனைய தோழர்கள் மற்றும்  தமிழர் சமூக ஜனநாகயககக் கட்சியின் தலைவர் தோழர் சுகு சிறீதரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கம் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

Related posts: