தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் – தொடருந்து தொழிற்சங்கங்கம்!

Sunday, October 6th, 2019


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் மூவாயிரம் தொடருந்து பணியாளர்களை சேவையிலிருந்து இடைநிறுத்த தயார்ப்படுத்தப்படுகின்றமைக்கு எதிராக முறையிடுவதற்கு தொடருந்து தொழிற்சங்கங்கம் தீர்மானித்துள்ளன.

இதற்கமைய, தொழிற்சங்க உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்பு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தொடருந்து தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

Related posts: