தொடர் போராட்டம் – மக்கள் பெரும் நெருக்கடியில்!
Tuesday, October 1st, 2019சம்பள அதிகரிப்பு உட்பட ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்டு வரும் ரயில் தொழிற்சங்கங்களின் போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் தொழிற்சங்கங்கள் நேற்று மாலை நடத்திய பேச்சுவார்த்தை தீர்வின்றி முடிவடைந்ததால், பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் நடைபெறும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அதிகளவான மக்கள் ரயில் ஊடாக தமது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்கின்றனர். இந்நிலையில் தொடர் பகிஸ்கரிப்பு காரணமாக மக்கள் கடும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள நியாயமற்ற பகிஷ்கரிப்பிற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்த அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு அரசியல் ரீதியில் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க திட்டமிடப்பட்டதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் அதனை நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 25ஆம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|