தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு!

Thursday, August 29th, 2019

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.

அரச பணியாளர்களுக்கு சமமாக, தங்களது சம்பளத்தையும் ஏனைய கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரி பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக அனைத்து பல்கலைகழகங்களின் நாளாந்த செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்திலும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணை தலைவர் தம்மிக்க எஸ் ப்ரியந்த எச்சரித்துள்ளார்.

Related posts: