தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ள புகையிரத ஊழியர்கள்!
Sunday, October 6th, 2019போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை புகையிரத ஊழியர்களை சேவையில் இருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து புகையிரத தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பிற்கும் தேர்தல்கள் ஆணையாளரிற்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து எமது செய்தி சேவை புகையிரத எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொடவிடம் கேட்ட போது தமக்கு நேர்ந்துள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் தேர்தலொன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் கடமைகளுக்காக புகையிரத சேவை பாரிய சேவையினை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் நடவடிக்கைகளின்போது ஏதாவது குறைப்பாடுகள் புகையிரத சேவையில் ஏற்பட்டால் அது குறித்து அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, இந்த விடயம் குறித்து தமது தொழிற்சங்கம் முன்கூட்டியே தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமது சேவை பாதுகாக்கப்படும் என உறுதியளித்து தமது கோரிக்கைகளுக்கு ஒரு சிறந்த முடிவை பெற்றுத் தருவார்களாயின் தாம் மீண்டும் சேவையில் ஈடுபட தயாரென சுட்டிக்காட்டிய அவர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்தார்.
Related posts:
|
|