தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

Saturday, January 11th, 2020


2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் இந்த மாத இறுதியில் கையொப்பம் இடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலில் கையொப்பம் இடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் அனைத்தும் 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமையவே நடத்தப்படவுள்ளன.

அதேபோல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கையும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக பல்வேறு தரப்பினர் விண்ணப்பங்களை முன்வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உரிய முறையில் கண்காய்வு அறிக்கையை சமர்ப்பிக்காத சில அரசியல் கட்சிகளின் பதிவை இரத்து செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடங்கள்! - அமைச்சர் சஜித்
10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!
இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் நாளை முதல் அறிமுகம்!
எதிர்வரும் 14ஆம் திகதியன்று கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பு - பேராயர் மெல்கம் கர்தினல்...
ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை!