தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
Wednesday, October 2nd, 2019ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையாகவுள்ள வேட்பாளர் ஒருவரையோ அல்லது கட்சியையோ ஊக்குவிப்பதற்காக வீதி ஓரங்களில் எண்மான பாதாகைகளை காட்சிப்படுத்துவதோ அல்லது திரையறங்குகளில் விளம்பரப்படுத்துவதோ தேர்தல் சட்டத்திற்கு அமைய தண்டனைக்குரிய குற்றம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரசாரங்களுக்கான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளல் மற்றும் பிரசாரங்களை மேற்கொள்ளல் என்பன தேர்தல்கள் சட்டத்திற்கு அமைய குற்றமாகும்.
இதற்கமைய, இதுபோன்ற பிரசாரப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேர்தல்கள் சட்டத்திற்கு அமைய, நடவடிக்கை மேற்கொள்ளவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், தேர்தல்கள் செயலகத்தின் ஊடக மத்திய நிலையம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 17 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்
Related posts:
|
|