தேர்தலில் களமிறங்கும் முரளிதரன்!

Wednesday, October 2nd, 2019


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அரசியலில் நுழைய தயாராகுவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மூலம் அவர் தனது அரசியல் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறுமுகம் தொண்டமானுக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தை தெரிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற கோத்தபாயவின் வியத்மக மாநாட்டில் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடப்படுகின்றது.

Related posts: