தேசிய மட்ட முதலிடங்கள் வெளியிடப்படாது – பரீட்சைகள் திணைக்களம் !

Monday, October 7th, 2019


தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியான கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் இருக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.

அதன்படி, தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கூறப்படுகின்றது.

தேவையற்ற போட்டித் தன்மையினால் மாணவர்களிடையே அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்காக இந்த தீர்மானத்தை திணைக்களம் எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: