தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் சிக்கல் இல்லை -ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்!

Thursday, October 24th, 2019


தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் பிரச்சினை இல்லை என ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைக்காக பயன்படுத்தப்படும் அட்டை நிறைவடைந்துள்ளமையினால், தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல் நிலவுவதாக கடந்த தினம் வெளியான தகவல் வெளியாகி இருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் டிசம்பர் மாதம் கல்வி பெர்த தராதர சாதாரண தரப் பரீட்சை என்பனவற்றின் காரணமாக, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகைதருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்காக தேசிய அடையாள அட்டை இலக்கம், புகைப்படத்துடன்கூடிய பிரத்தியேக சான்றிதழை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கமைய, தற்போது நிலவும் குறைபாடுகளை அடுத்தவாரமளவில் நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்

Related posts: