தெரிவு குழுவின் காலம் நீடிப்பு!

Thursday, August 22nd, 2019


இலங்கையில் ஏப்ரல் 21 தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் காலம் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றின் நிலையான ஆணை 102 இன் அடிப்படையிலேயே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மே 22ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அடிப்டையிலே இந்த தெரிவு குழு நியமிக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் புஜித ஜெயசுந்தர, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹமசிரி பெர்னாண்டோ, சிரேஸ்ட புலனாய்வுதுறை சேவை அதிகாரி நிலந்த ஜெயவர்தன, லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த குழு முன்னணியில் சாட்சியம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


50,000 மாணவர்கள் அடையாள அட்டை பெறவில்லை - ஆட்பதிவுத் திணைக்களம்!
இரத்த மாதிரி அறிக்கையை விரைவாக பெற்று கொடுக்காத மருத்துவமனைகளுக்கு நடவடிக்கை!
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் - E.P.D.P. யின்  முல்ல...
பாடசாலைகளில் மேலாளர் நியமனம் - கல்வி அமைச்சர்!
ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிதாக அதிகாரிகள் இணைப்பு!