திரையரங்குகளில் பிரச்சாரத்திற்கு தடை – தேர்தல் ஆணைக்குழு!

Thursday, October 24th, 2019


டிஜிற்றல் திரைகள் மற்றும் சினிமா அரங்குகளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தக அறிவிப்புக்கள் பிரச்சாரம் செய்யப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி இன்று (23) உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த ரிட் மனுவை தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினால் சட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மனுதாரான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை இடைநிறுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரி மனுதாரரான நிறுவனம் கோட்டுக்கொண்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளான தேர்தல் ஆணைக்கழுவின் தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரமைகளை மீறுவதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: