திடீடென அகற்றப்பட்டது மண்டைதீவு சோதனைச் சாவடி!

Monday, September 9th, 2019

தீவகத்தை தரைவழிப்பாதையூடாக இணைக்கும் மண்டைதீவு சோதனைச் சாவடி திடீரென நீக்கப்பட்டுள்ளது. குறித்த சோதனைச் சாவடி கடந்த இரு தினங்களுக்கு முன்னர்  அகற்றப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் சோதனைச் சாவடிகள், காவலரண்கள் அமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டன.

ஆனால், மண்டைதீவு சந்தி சோதனை சாவடி அகற்றப்பட்டு மீண்டம் அமைக்டகப்பட்டது.  இந்நிலையிலேயே மண்டைதீவு சோதனைச்சாவடி தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: