தற்போதைய ஜனாதிபதி ஆணைக்குழு மீது பூரண நம்பிக்கை உண்டு – பேராயர் !

Sunday, December 8th, 2019


ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களில் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா? என்பது தொடர்பாக ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையிலேயே தெரியவரும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக அவர் இன்று இரண்டாவது நாளாக சாட்சி வழங்கினார். சுமார் 3 மணி நேர சாட்சி வழங்கலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக எனது பக்கம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்தேன். குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து நாம் வழங்கும் சாட்சியங்களின் அடிப்படையில் ஆணைக்குழு ஏனையவர்களிடம் விசாரணை செய்து அறிக்கை ஒன்றை தயாரிக்கும்.

இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளனரா? என்பது தொடர்பாக ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையிலேயே தெரியவரும். ஆணைக்குழுவானது சிறந்த முறையில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

பக்கச்சார்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எமக்கு உடன்பாடில்லை. அதனையே ஜனாதிபதியும் வலியுறுத்தியுள்ளார். ஆகவே அதன் மீது எமக்கு பூரண நம்பிக்கை உள்ளது” என்றார்.

Related posts: