தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு – மஹிந்த ராஜபக்ஷ!

Sunday, September 8th, 2019


பறக்கப்போகும் பிள்ளைகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பு என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவிசாவளையில் நடைப்பெற்ற மஹா ஜன எக்சத் பெரமுண கட்சியின் சம்மேளன கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்  –

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதுவரையில் ஏகமனதாக ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியவில்லை என கூறினார்.  எவ்வாறாயினும் எந்தவொரு கட்சி போட்டியிட்டாலும் பொதுஜன பெரமுனவால் அதனை தோற்கடிக்க கூடிய வல்லமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐ.தே.கவுக்கு இன்றுவரையில் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாமல் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது.

மீண்டும் தான் போட்டியிடுவதாக ரணில் கூறினார். ஆனால் மற்றையவர் நானே என கூறுகின்றார். இப்போது அவர் சஜித்துக்கு முதுகெலும்பு இருக்கிறதா என்று பார்க்க விரும்புகிறார். அவர் சொல்வதைச் செய்வார். நாங்கள் மூவரும் ஒன்றிணைந்து போட்டியிட முடியும். தனியாக வாருங்கள் நாங்கள் வென்று காட்டுகின்றோம்.  இலங்கை மக்களை வேறொரு நாட்டிற்கு அடிமையாக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

Related posts: