தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

Thursday, January 16th, 2020


அரச போக்குவரத்துக்களிலும், தனியார் போக்குவரத்துக்களிலும் தை மாதம் 15 ஆம் திகதிமுதல் தொடர் இசைகளை ஒலிபரப்பவும் காணொளிகளை காண்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறும் போக்குவரத்து சாதனங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

இந்த நடைமுறை ஜனவரி முதலாம் திகதியே அமுல்செய்யப்படவிருந்தபோதும் அது ஜனவரி 15வரை பிற்போடப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறுபிள்ளைகளுக்கு பொருத்தமற்ற காணொளிகள் ஒலி, ஒளிப்பரப்பட்டதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வந்தன. இதனையடுத்தே புதிய சட்டநடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் பயணிகள் 1955 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு முறையிடலாம் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது

Related posts: