ஜி.எஸ்.பி பிளஸ் : ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை விஜயம்!

Friday, August 30th, 2019


ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் நடைமுறை குறித்து உண்மையை கண்டறிய ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

குறித்த குழு உரிய அதிகாரிகளையும், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையுடன் தொடர்புடைய தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான விஜயம் விசேட விஜயம் இல்லையெனவும்,வருடத்துக்கு ஒருமுறை வழமையாக இடம்பெறும் விஜயமாகவே கருதப்படுவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சொந்தவிடத்தில் ஆரம்பம்
பான் கீ மூன் வருகை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது! இருந்தும் நாம் வரவேற்கின்றோம்  - வாசுதேவ நாணயக்கார!
கோதுமை மாவின் விலை  குறைக்கப்பட்டால் பாண் விலையும் குறைக்கப்படும்!
பொருட்களை நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை!
13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் -  பிரபல சட்டத்தரணி முடியப...