ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய!

Sunday, October 6th, 2019


நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

நாளையதினம் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று சுபநேரத்தில் வேட்புமனு பத்திரத்தில் கையெழுத்திட்டார். இது தொடர்பான நிகழ்வு மிரிஹெனயிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts: