ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முக்கிய தகவல்!

Thursday, September 5th, 2019


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இருபதிற்கும் அதிகமான அரசியல் கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் மாதம் 10 ஆம் திகதி மற்றும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related posts: