ஜனாதிபதி தேர்தல்: எதிர்ப்புகளை நிராகரித்த மஹிந்த தேசப்பிரிய!
Monday, October 7th, 2019ஜனாதிபதி தேர்தலிற்கு 35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த இரண்டு எதிர்ப்புக்களும் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அன்றைய தினம் முற்பகல் 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்று முதல் 7 நாட்களுக்கு பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி பேரணிகள் நடத்தப்பட்டால் நீதிமன்றுக்கு அறிவிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|