ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதந்த வண்ணம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில் 3 கண்காணிப்பு அமைப்புகள் ஏற்கனவே நாட்டுக்கு வருகை தருவதை உறுதிபடுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேபோல் உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் அழைப்பின் பேரில் மற்றுமொரு வெளிநாட்டு கண்காணிப்பு குழுவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கில் பாடசாலைகளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கலாம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி!
வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மீண்டும் ஆரம்பம் – முற்பதிவு அவசியம் என வெளிவிவகார அமைச்சு அறிவிப...
|
|