ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானம்!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நிறைவுக்கு வருகிறது. இந்த மாதம 31ஆம் திகதியுடன் குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் நிறைவடைவதன் காரணமாக விசாரணைகள் தொடர்பிலான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி. எதிர்வரும் சில நாட்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை குறித்த ஆணைக்குழு மதிப்பாய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சகத்திற்கு பெற்றோல் கொள்வனவு செய்த போது இடம்பெற்ற மோசடிகள் குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்க நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|