ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

அரச ஊழியர்களின் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க, ஜனாதிபதி நியமித்த எஸ்.ரனுக்கே தலைமையிலான குழுவினர் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், 2020ஆம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகாரி தரத்தில் இருக்கும் அதிகாரியின் அடிப்படை சம்பளம் 9 ஆயிரத்து 587 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது.
அமைச்சுக்களின் செயலாளர்களின் சம்பளம் 23 ஆயிரத்து 975 ரூபாவினாலும் கீழ் நிலை ஊழியர்களின் சம்பளம் 3 ஆயிரம் ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது.
Related posts:
சூரிய சக்தி மின் பிறப்பாக்கத்திற்கான ஒழுங்கு விதிகள் - பொதுமக்கள் ஆலோசனை!
புங்குடுதீவு பெண்ணுக்கு கொரோனா தொற்று: மறு அறிவித்தல்வரை உடனடியாக நிறுத்தப்பட்ட படகு சேவை!
அமைச்சரவை நியாயமான தீர்வை முன்வைத்துள்ளது - சிறுவர்களின் சார்பில் கடமைகளை மீள ஆரம்பியுங்கள் – ஆசிரி...
|
|