சுவரொட்டிகளை அகற்றுவதற்கு 45 மில்லியன் ஒதுக்கீடு – இலங்கை காவல்துறை!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் காட்சிப்பொருட்களை அகற்ற 45 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய இலங்கை காவல்துறை தீர்மானித்துள்ளது.
காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர இதனை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
சுவரொட்டிகள் மற்றும் தேர்தல் பிரசாரப்பொருட்களை அகற்ற தற்காலிக அடிப்படையில் பணியாளர்கள் அமர்த்தப்படவுள்ளனர். இதன்படி 1405 பணியாளர்களை பணிகளில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எம்பிலிப்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் இதுவரை வன்முறைகள் எவையும் பதிவாகவில்லை என்றும் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
Related posts:
நாட்டின் நீர் மின் உற்பத்தி 10 வீதமாக குறைவடைந்துள்ளது - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு!
இலங்கையில் புதிய இன நிலக்கடலை அறிமுகம்!
புலமைப் பரிசில் பரீட்சை : தேசிய ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்கள்!
|
|