சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவேன் – பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!

Sunday, October 27th, 2019


ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் வீழ்ச்சியடைந்த சுற்றுலா தொழில்த்துறையை அதிக அந்நிய செலாவணி கிடைக்கும் வகையில் கட்டியெழுப்பவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை நகரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய  போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பயிரிடப்படும் கிழங்கு மற்றும் மிளகு ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒரு போதும் அனுமதிக்கப்படமாட்டாது

நாட்டில் இருக்கும் வளத்தை நாம் பாதுகாப்பதற்கு தவறினால் அதனால் ஏற்படும் நன்மைகள் இல்லாது போவதுடன் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் பின்னடைவை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் சுற்றுலாத்துறையினை மையப்படுத்தி பல்வேறு தொழிற்துறைகள் முன்னெடுக்கப்படுகிறது.

எனினும் நாட்டில் இடம்பெற்ற ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் அவை அனைத்தும் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது.

தமது ஆட்சியின் ஊடாக சுற்றுலாத்துறையில் 10 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தம்மால் செய்யக்கூடிய வேலைத்திட்டங்களையே தாம் தற்போது முன்வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி தியத்தலாவையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் அதன் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்றார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்த பகுதியில் முப்படையினரின் குடும்பத்தினரும், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் பொதுமக்களும் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டார். அவர்களுக்கு வேதனம் தொடர்பில்  பாரிய பிரச்சினைகள் இருப்பதை தாம் அறிந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஏனைய அரச சேவைகளுடன் தொடர்புடையோரின் வேதன பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமது ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் தொழிநுட்ப ரீதியான உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளதை போன்று அந்த நிறுவனங்களுக்கான தீர்வையை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றியதை போன்று எதிர்காலத்தில் வழங்கப்படும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்கட்;சித்தலைவர் தாம் மேற்கொண்ட அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பில் மக்கள் நன்கு அறிவார்கள் என குறிப்பிட்டார்.

அவை அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதிவேக வீதி, துறைமுகங்கள் உள்ளி;ட்ட பல்வேறு வளங்கள் எதிர்கால தலைமுறைக்கு உரித்தானதாகும். அவைகளை சர்வதேச நாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

ஐந்து வருட காலத்திற்கு அதிகாரத்திற்கு வந்து எதிர்கால தலைமுறைக்கு உரித்தான விடயங்களை விற்பனை செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தினை கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்ப்பார்த்த பிரதமரின் எண்ணம் ஈடேறவில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related posts: