சீரற்ற காலநிலை: 11 மாவட்டங்களைச் சேர்ந்த 5600 பேர் பாதிப்பு!

Tuesday, September 24th, 2019


நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் ஆயிரத்து 426 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மழையுடனான காலநிலையால் 326 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 323 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக 338 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 19 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை 69 சிறிய மற்றும் மத்தியதர வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக ஜின் கங்கை பெருக்கெடுத்து வருவதுடன், பத்தேகம பிரதேசத்தில் ஜின் கங்கையின் நீர்மட்டம் சற்று உயர்வடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக மழையுடனான காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: