சிறைக் கைதிகளுக்கும் சந்தர்ப்பம் வேண்டும் – நீதிமன்றில் மனு!

Thursday, October 10th, 2019


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாககல் செய்யப்பட்டுள்ளது. கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உள்ளிட்ட அந்த ஆணைக்குழுவின் நான்கு உறுப்பினர்களும் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தலின் போது சிறையில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், அதனூடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கைதிகளுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு உத்தடவிடுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இணுவில் காரைக்கால் அம்மன் ஆலய புனரமைப்பிற்கு உதவுமாறு ஈ.பி.டி.பி.யிடம் கோரிக்கை!
புனர்வாழ்வு பெறாத 275 போராளிகள் உள்ளனர்!
பொலிஸாருக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு விசாரணை பெப்ரவரியில் - யாழ்.மேல் நீதிமன்றம் நேற்று அற...
அரசியல்வாதிகளது  தவறுகளால்  வடக்கிற்கு ஒதுக்கப்படும்  பணம்  மீளவும் திரும்புகின்றது -வடமாகாண ஆளுநர்!
நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தில் -  எச்சரிக்கிறார் மத்திய வங்கி ஆளுநர் !