சிறுவர் தினத்தை முன்னிட்டு பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வங்கிக் கணக்கு ஆரம்பித்துவைப்பு!

Tuesday, October 1st, 2019

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் சிறுவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக திருநெல்வேலி பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்து.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனின் வழிநடத்தலில் இரவீந்திரதாசன் நீலவர்னா அவர்களது முயற்சியால் குறித்த பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கான வங்கி கணக்கு நேற்றையதினம் ஆரம்பதித்துவைக்கப்பட்டு சிறுவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், நல்லூர் நிர்வாக செயலாளர் இரவீந்திரதாசன் மற்றும் பிரதேச உறுப்பினர் முன்பள்ளி சிறுவர்களின் பெற்றோர்கள் முன்பள்ளி ஆசிரியர் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .


தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாத...
பஞ்சாப்  ரயில் விபத்து: செல்பி மோகஆம காரணம் என தகவல்!
மோதலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரத்து?
பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக உயர்த்த நடவடிக்கை – ஜனாதிபதி!
விசாரணையின் அடிப்படையில் ஆயுதங்கள் மீட்பு!