சிறிய வாகனங்களின் விலை ஒன்றரை இலட்சம் ரூபாவினால் அதிகரிப்பு!

Saturday, September 14th, 2019


சிறிய வாகனங்களின் விலை ஒன்றரை இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஜப்பானின் யென் பெறுமதி அதிகரித்துள்ளது. இதனால் சிறிய வாகனங்களின் விலை ஒன்றரை இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். விலை அதிகரிப்பு காரணமாக வாகனங்களின் விற்பனை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய சொகுசு வாகன வரி விதிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் 35 இலட்சம் ரூபாவிற்கும் அதிக விலையில், 2300 இயந்திரத் திறன் கொண்ட வாகனம் மற்றும் 1800 திறன் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் 5 – 25 இலட்சம் ரூபாய் மேலதிக வரி செலுத்த நேரிடும்.

வாகன விற்பனை வீழ்ச்சிக்கு இந்த நிலைமை மேலும் அதிகமாக தாக்கம் செலுத்தும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பூஜ்ஜிய வீதமாக வாகன விற்பனை வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் 20 வீதத்தில் அதன் விற்பனை அதிகரித்து. இந்நிலையில் இவ்வாறான நிலைமை மேலும் விற்பனை வீழ்ச்சியடைய செய்யும்.

இயந்திர திறன் 650, 800 மற்றும் 1000 பிரிவுகளில் உள்ள வாகனங்களின் விலை 1.5 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கவுள்ளது. இதனால் சிறிய அளவிலான வாகனங்களின் விலை 26 லட்சம் ரூபாவில் இருந்து 27.5 இலட்சத்திற்கு அதிகரிக்கும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: