சிறந்த தலைமுறையை உருவாக்க பாடசாலை கல்வியுடன் சமயக் கல்வியும் அவசியம் – ஜனாதிபதி!

Monday, August 5th, 2019


ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் முக்கியமானதென்றும் அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கதுறுவெல ஜயந்தி விகாரையில் இடம்பெற்ற 124வது அகில இலங்கை அறநெறிப் பாடசாலைகள் தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சிறந்தோர் எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு பாடசாலை கல்வியுடன் சமயக் கல்வியையும் வழங்குவது அவசியமாகுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

124வது அகில இலங்கை அறநெறி பாடசாலைகள் தின நினைவு மலரும் அறநெறிப் பாடசாலைக் கொடியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

40 வருட சேவையை பூர்த்தி செய்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், சமாதான நீதவான் பதவியும் வழங்கப்பட்டது, ஆசிரியர் கொடுப்பனவுகள் மற்றும் சீறுடைகள் வழங்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

Related posts: