சிகிரியாவில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட அனைவருக்கும் சந்தர்ப்பம்!

Friday, September 20th, 2019


சுற்றுலா பயணிகள் சிகிரியாவில் இருந்து சூரிய உதயத்தை பார்வையிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலான நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின் சிகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அநுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் –

எதிர்வரும் 27ஆம் திகதி சிகிரியாவை அதிகாலை ஐந்து மணிக்கே திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிதுரங்கல பகுதிக்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்வையிட செல்கின்றனர்.

இதனை அடிப்படையாக வைத்தே சுற்றுலா பயணிகளுக்கு சூரிய உதயத்தை பார்வையிட சந்தரப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலான மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழமையாக சிகிரியாவை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டு விநியோகமானது காலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்.

இவ்வாறான நிலையில் உலக சுற்றுலா தினமான எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாலை 5 மணிமுதல் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் சிகிரியாவிலிருந்து சூரிய உதயத்தை பார்வையிடும் வாய்ப்பை சுற்றுலாப் பயணிகள் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: