சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் ஆணையாளர்!

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான ஒழுங்குகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சை இம்முறை பரீட்சைக்கு முன்னதாக அடுத்த மாதம் ஒக்டோபர் மாதம் நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்!
எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கிலிருந்து ஆரம்பிக்கின்றது விவசாயப் புரட்சி - விவசாய அமைச்சர் மஹிந்தானந்...
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை...
|
|