கோத்தபாய ராஜபக்சவிற்கே ஆதரவு: அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

Sunday, October 13th, 2019


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று காலை 9.30 மணியளவில் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியிருந்தது.

இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

Related posts: