கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா !
Wednesday, August 28th, 2019முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒன்றை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா இவ்வாறு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கடிதம் தம்மிடம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச இன்னமும் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடவில்லை என சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனினும், கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எவ்வித தடையும் கிடையாது எனவும் அவர் அமெரிக்காவின் பிரஜை கிடையாது எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச ஏற்கனவே இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|