கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – வெளியாகின ஆவணங்கள் !

Tuesday, October 1st, 2019


முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

இதனை எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சனா விஜயசேகர வெளியிட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் 2005 இல் திரும்ப பெறப்பட்ட இரட்டை குடியுரிமை சான்றிதழ் மற்றும் 2019 இல் அமெரிக்க குடியுரிமை இழந்ததற்கான சான்றிதழ் இதில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்து செய்யப்பட்டமைக்கான ஆதாரங்களை பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டிருக்கின்றார்.

Related posts:


உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரே தமிழ் அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தா - கிழக்கு மக்கள் பெருமிதம்! ...
இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொள்ள சீன அரசாங்கம் மருத்துவ உதவி : 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான உப...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படு...