கொரோனா வைரஸ்: 32 பேரின் உயிரை காப்பாற்ற ஜனாதிபதி நடவடிக்கை!

Sunday, January 26th, 2020


சீனாவின் ஹூவான் நகரில் உள்ள சகல இலங்கை மாணவர்களையும் உடனடியாக அங்கிருந்து நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதனுடன் சம்மந்தப்பட்ட துறையினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்காக இலங்கைக்கு சொந்தமான விசேட வானூர்தி ஒன்றின் ஊடாக அவர்களை அழைத்துவருவதற்கு பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஹ_வான் நகரிலிருந்து இருந்து வெளியில் செல்வதற்கும், ஏனைய பகுதியில் இருந்து குறித்த நகரிற்கு உள்நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஹூவான் நகரில் தங்கியிருக்கும் 32 இலங்கையர்களையும் அங்கிருந்து அழைத்துவருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த இலங்கையர்கள் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனவும் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் பதில் தூதுவர் கே.கே.யோகாநந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரானா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் உள்ளிட்ட இரண்டு பேர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றையதினம் சுகயீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் அண்மையில், நாட்டிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாகவும், மற்றைய பெண் சீனாவில் கல்விகற்ற நிலையில் நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு பேருக்கும் கொரொனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக அவர்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related posts:


கொலைகளையும் சட்டவிரோத மதுபான உற்பத்தியையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுழிபுரத்...
உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார் – உலகெங்கிலுமிருந்து மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்ப...
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்திற்கான அனைத்து செயன்முறை பரீட்சைகளும் இரத்து - பரீட்சைகள் திணைக்கள...