கொரோனா வைரஸ்: மேலும் இருவர் ஐ.டி.எச் மருத்துவமனையில்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரு வெளிநாட்டவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாகிஸ்தானை சேர்ந்த ஆணொருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஐ.டி.எச் மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மூன்று பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது முதற்கட்ட மாதிரி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொரள்ளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோயாளிகளின் இரண்டாம் நிலை இரத்த மாதிரிகளில் ஆய்வக சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைமை நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீரா, நாட்டில் பதிவான மூன்று நோயாளிகளின் நிலை மோசமாக இல்லை என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|