கேந்திர நிலையமாகும் இலங்கை – ஆதரவுக் கரம் நீட்டும் ஜேர்மன் !

Saturday, August 31st, 2019

இந்து மா சமுத்தரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்துக்கு முழமையான ஆதரவை வழங்கியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் தூதுக்குழு நேற்றையதினம் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளது.

ஜேர்மன் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மற்றும் அந்நாட்டின் போக்குவரத்து , டிஜிட்டல் அடிப்படை வசதிகள் தொடர்பான துணை அமைச்சர் ஸ்டெபன் பில்கர் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார திட்டங்கள் குறித்து இந்த கலந்துரையாடலின் பொது கவனம் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பில் ஜேர்மன் நாட்டின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதே வேளை உலக காலநிலை மாற்றம் , பசுமை திட்டம் மற்றும் நிலையான அபிவிருத்திகள் குறித்தும் இருதரப்பு கருத்தாய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்து மா சமுத்தரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் அதற்கான திட்டங்கள் குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜேர்மன் தூதுக்குழுவிடம் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த திட்டத்துக்கான முழு ஒத்துழைப்பையும் ஜேர்மன் வழங்கும் என ஜேர்மன் தூதுக்குழுவினர் கூறியுள்ளனர். மேலும் இந்த கலந்துரையாடலில் அமைச்சர் சாகல ரத்னாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜேர்மன் போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் அடிப்படை வசதிகள் அமைச்சின் அதிகாரிகள் , இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: