குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி மீதுதான வழக்கு தள்ளுபடி!

Saturday, August 24th, 2019

சட்டத்தரணி சாலிய சமரசிங்கவினால் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஷானி அபேசேகர மீது தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் ஷானி அபேசேகர ,நான்கு சந்தேகநபர்களை கைது செய்ய தவறியதாக குறிப்பிட்டு, சட்டத்தரணி சாலிய சமரசிங்க இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

அதோடு , ஷானி அபேசேகரவிற்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்கும்படியும் அவர் கோரியிருந்தார். இந்நிலையில் , குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 216 வது பிரிவின் கீழ் ஷானி அபேசேகர குற்றத்தைச் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து சட்டத்தரணியில் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது

Related posts: