கிளிநொச்சியில் துப்பாக்கி சூட்டு: உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம்!

Tuesday, October 15th, 2019


கிளிநொச்சி இந்துபுரத்தில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாகபொலிஸார் கிடைத்த தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்றபோது ஜீப் ஒன்று அங்கு பயணித்தது. இந்த நிலையில் அதில் கஞ்சா கடத்தப்படுவதாக சந்தேகித்து பொலிஸார் அதனை மறித்தபோது வாகனம் நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனையடுத்து தமது சமிஞ்சையை மதிக்காமல் சென்றதாக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அதன் பின்னரே குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனத் தெரியவந்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: