காலநிலை சீர்கேடு: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
குறைந்தளவு வேகமான 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனத்தை செலுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலைக்கு பொறுப்பான பொறியிலாளர் சசித் முனசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஒன்று அதிவேக நெடுஞ்சாலையிலும் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது ஒரு அவசர சந்தர்ப்பத்தில் அதிவேக வீதியில் வாகனத்தை நிறுத்தினால் இரட்டை மின்குமிழ்களை ஒளிர செய்யுமாறு சாரதிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ நுழையும் வீதியில் வெலிமை மற்றும் கனங்கே நோக்கி பயணிக்கும் வீதி தற்போது வரையில் நீரில் மூழ்கியுள்ளது.
அந்த வீதிகளில் 4 அடி வரை நீர் நிரம்பி காணப்படுவதாக அதிவேக நெடுஞ்சாலைக்கு பொறுப்பான பொறியிலாளர் சசித் முனசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|