காணிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை !

Tuesday, September 17th, 2019


வருடத்தின் முதல் காலாண்டில் கொழும்பு நகரில் உள்ள காணிகளின் விலை 13.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

காணிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு, வர்;த்தக நிலையங்கள், ஆடம்பர விடுதிகள், காணிகள் என்பனவற்றை அடிப்படையாக கொண்டு குறித்த பெறுமதி மதிப்படப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் வீடமைப்புக்கான காணி நிலங்கள் 12.8 வீதமாகவும், வர்த்தக நிலங்களுக்கான காணிகள் 13.2 வீதமாகவும் ஏனைய நிலங்கள் 14.9 வீதமாகவும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: